அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர், இன்று (ஜூன் 13) சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் தங்களை த.வெ.க. வில் இணைத்துக் கொண்டனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன், முன்னாள் எம்எல்ஏ ரவி, திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். இதேபோல், பாஜகவைச் சேர்ந்தவரும், விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். விஜயதரணி, திருப்பூர் பாஜக மகளிர் அணி நிர்வாகி கே. ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதேபோல திருச்சி தெற்கு மாவட்ட அமமுக
முன்னாள் செயலாளர் செந்தில்நாதன் தனது ஆதரவாளர்களுடன் இன்று த.வெ.க.வில் இணைந்தார்.

Comments are closed.