இயக்குநர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜா (வயது 84) நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டம், காட்ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பெருந்திரளாக பங்கேற்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் இன்று( ஜூன் 11) மாலை 4:40 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Comments are closed.