நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை சந்தித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார். நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று( ஜூன் 11) காலை முதல் மாலை வரை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து மாநில முதல் மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை புறப்பட்டு சென்றார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிடும்போது தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் புறப்பட்ட சில நிமிடங்களில் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.