திருச்சியில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்’…* சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் தொடங்கி வைத்தார்!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து திருச்சி மாநகரில், வடக்கு மற்றும் தெற்கு என 2 “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை இன்று (10.06.2026) மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஐபிஎஸ் தொடங்கி வைத்தார். மேற்கண்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்ற உள்ள பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு மாநகர ஆயுதப்படையில் மாநகர காவல் ஆணையர் ந.காமினி மற்றும் காவல்துணை ஆணையர்கள் ஆகியோர் தக்க அறிவுரைகளை வழங்கியும், அவர்களுக்கு வழங்கபட்ட பிரத்யேக வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த அதிரடிப்படையினர் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Comments are closed.