Rock Fort Times
Online News

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் பாரதிராஜா…- நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி…!

இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்படும் பாரதிராஜா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று( ஜூன் 10) காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாரதிராஜா உடலுக்கு திரைத்துறையினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “பாரதிராஜா என்னுடைய 50 ஆண்டுகால நண்பர். அவரது திறமை, சாதனைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். திரைத்துறையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி அவர்களை திரையுலகத்தில் வாழ வைத்தவர். அதுமட்டுமின்றி திரைத்துறையினருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து போராடியவர். அவருடைய பெயர் என்றும் நிலைத்து நிற்கும். தனிப்பட்ட முறையில் குழந்தையை போன்றவர் பாரதிராஜா. அவர் மனதில் என்ன நினைத்தாலும் அதை வெளிப்படையாக பேசுவார். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உனது நடிப்பை எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார். அவர் உயிருடன் இருக்கும்போது, அவரை பார்க்க வேண்டும் என கேட்டபோது, அவர் குணமடைந்து விடுவார்; அப்போது வாருங்கள் என கூறினார்கள். ஆனால் இப்போது அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை. அவர் என்றென்றும் எனது நினைவில் இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என தெரிவித்தார். ரஜினியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்