Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.கே.சாதிக் பாட்சா இல்ல திருமண விழா…* ஜூன் 11ம் தேதி நடக்கிறது..!

திருச்சி மாநகராட்சி 19-வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் எஸ்.கே.சாதிக்
பாட்சா. திருச்சி மலைக்கோட்டை, சமஸ்பிரான் தெரு பகுதியை சேர்ந்த இவர், வார்டு பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் அன்பாக பழகக் கூடியவர். பொது மக்களின் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் இன்முகத்துடன் பங்கேற்று சிறப்பிப்பார். இந்நிலையில்
எஸ்.கே.சாதிக் பாட்சா- எஸ். ஜாஹிதா தம்பதியரின் புதல்வி எஸ்.ஷாஹினுக்கும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜனாப் ஏ.ஆர்.சுல்தான்- எஸ்.ரஹமத் நிஷா தம்பதியரின் மகன் எஸ். முஹம்மத் இலியாசுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ எல்.கே.எஸ்.மகாலில் 11ம் தேதி காலை 10-30 மணி முதல் 11-30 மணிக்குள் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ், மார்க்கெட் பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு, 19வது வட்டக் கழக செயலாளர் ஜி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருச்சி மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் வரவேற்று பேசுகிறார். திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, கவிஞர் சல்மா எம்பி, வண்ணை அரங்கநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், பி.எம்.சபியுல்லா, மாமன்ற உறுப்பினர் என்.செந்தில், பி.சேகர் அருண் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மார்க்கெட் பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்