Rock Fort Times
Online News

‘மக்கள் மேடை’ என்ற பெயரில் தனி இயக்கம் தொடங்கினார், லதா ரஜினிகாந்த்…!

ரஜினிகாந்தின் மனைவி லதா மக்கள் மேடை என்ற பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். மாற்றத்தை விரும்புவோர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் இந்த இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களைச் செய்வோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் ஒன்றிணைவோம். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்புவோர் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்” என்று பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய அண்ணாமலை இன்றைய தினம் புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்