Rock Fort Times
Online News

என்னை கட்சியில் சேர ரஜினிகாந்த் அழைத்தார்’…* மனம் திறந்தார் அண்ணாமலை!

பாரதிய ஜனதா கட்சியில் பயணித்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அகில இந்திய தலைமையிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். பின்னர் அவர் இன்று( ஜூன் 5) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் தமிழக மக்களுக்காக பணியாற்றியுள்ளேன். புதிய இலக்கோடு, புதிய அரசியலை அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய நோக்குடன் பாஜகவில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இன்றுடன் புதிய பாதை, புதிய இயக்கத்தை தொடங்குகிறேன். தமிழ்நாட்டு பண்பாட்டை நான் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழர் உரிமையை நான் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தேன். பாஜக தலைமையுடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதனால், கட்சியில் இருந்து விலகும் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், மேலும் ஒரு புதிய கட்சி தேவை என்பதை நான் உணர்ந்துள்ளேன். என்னுடைய இயக்கம் கட்சியாக மாறும் நாளில் அனைத்தையும் அறிவிப்பேன்.

ரஜினிகாந்த் அழைப்பு,

ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருந்த அரசியல் கட்சியில் சேருமாறு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், தான் அதனை ஏற்காமல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். பாஜகவில் நான் இணைந்ததற்கு முதல் நாளில் ரஜினிகாந்த் எனக்கு அழைப்பு விடுத்தார். எனக்கும், ரஜினிகாந்திற்கும் நெருங்கிய நட்பு இருந்தது. ரஜினிகாந்த் அழைப்பை ஏற்க முடியாததற்காக அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டன். இன்றும் ரஜினிகாந்த் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மீது இன்றும் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளேன். வரும் பொதுத் தேர்தலில் இந்த கட்சி கண்டிப்பாக போட்டியிடும் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்