Rock Fort Times
Online News

தலைநகர் டெல்லியில் துயர சம்பவம்: உணவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலி…!

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று( ஜூன் 3) காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த 38 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்