தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று (மே 29) 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்றும் (மே 30) பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழக கவர்னரின் முதன்மை செயலாளரையும் தமிழக அரசு பணி மாற்றம் செய்துள்ளது. அதன் விபரம் வருமாறு;
தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமார், வீட்டு வசதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவகுரு பிரபாகரன் ராமநாதபுரம் கலெக்டராக நியமனம், திருவள்ளூர் கலெக்டராக கவிதா, சென்னை கலெக்டராக மாலதி ஹெலன், பெரம்பலுார் கலெக்டராக சரண்யா அரி, அரியலூர் கலெக்டராக மிருணாளினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி கமிஷனராக கவுரவ் குமார், திருச்சி மாநகராட்சி கமிஷனராக வீர் பிரதாப் சிங், கோவை மாநகராட்சி கமிஷனராக கட்டா ரவி தேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.