முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நாள் முதல் தலைமை செயலகத்திற்கு கோட் சூட் அணிந்தே
வருகிறார். இதனையடுத்து அடுத்தடுத்து நடைபெற்ற அரசு நிகழ்வுகளிலும், கருப்பு கோட் சூட்டில் பங்கேற்றார். பிரதமரை சந்திக்கும் போதும் கருப்பு கோட் சூட்டிலேயே டெல்லிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று(மே 29) தலைமை செயலகத்திற்கு பட்டு வேஷ்டி, சட்டையில் வருகை தந்தார். எப்போதும் கருப்பு கோட் சூட்டில் வரும் முதலமைச்சர் விஜய், இன்று பட்டு வேஷ்டி, சட்டையில் வந்ததை அரசு அதிகாரிகள் முதல் தலைமைசெயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வரை வியந்து பார்த்தனர். விஜயின் நண்பரும், மேலாளருமான
ஜெகதீஷ் புதுமனை புகுவிழாவிற்கு பட்டு வேஷ்டி சட்டையில் சென்ற முதலமைச்சர் விஜய், அப்படியே தலைமைச் செயலகம் வந்ததாக கூறப்படுகிறது.

Comments are closed.