லஞ்சம் வாங்கியவர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மன்னித்து விடுவிப்பா?* ஆணித்தரமாக மறுத்த அமைச்சர் ரமேஷ்…!
திருச்செந்தூர் முருகன் கோயிலில், பொதுமக்களில் ஒருவராக டி-ஷர்ட் அணிந்தபடி எளிய முறையில் இந்து சமய அறநிலைய அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை அடையாளம் காணாத அர்ச்சகரில் சிலர் அணுகி, 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விஐபி தரிசன வழியில் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து அந்த ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்கும் நோக்கில், ஜி-பே வழியாக பணத்தை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்துள்ளார் அமைச்சர். பின்னர்தான் அவர் அமைச்சர் என்பது தெரிய வந்தது. அதன்பிறகு அர்ச்சகர்கள் இருவர் மற்றும் கோவில் ஊழியர்கள் சிலரிடம் விளக்க மற்றும் மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். இதனிடையே, தவறு செய்தவர்களும், அமைச்சரும் ஒரே பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உயர்நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மன்னிப்பு கடிதம் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக இணையத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சஸ்பெண்ட்:
இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த 2 பேர் டிஸ்மிஸ் செய்ய்யப்பட்டுள்ளதாகவும், அர்ச்சகர் ஒருவர் பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சண்முகவிலாச மண்டபம் வாயிலில் பணம் பெற்ற அர்ச்சகர் அய்யப்பன், மறு உத்தரவு வரும் வரை திருச்செந்தூர் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்டதற்காக 2 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.