Rock Fort Times
Online News

காலியாகும் சட்டப்பேரவை தொகுதிகள்… அடுத்த கட்ட நடவடிக்கையில் தேர்தல் ஆணையம்..!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் தொடர்பான அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சட்டப்பேரவை செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி ஏற்கனவே காலியாக இருந்த நிலையில், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கயல்விழி செல்வராஜ், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கிசுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்த தொகுதிகளும் காலியாகியுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. இதன் அடிப்படையில், திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து மொத்தம் 5 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பதவி விலகிய 4 எம்.எல்.ஏ.க்களும் பின்னர் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்