Rock Fort Times
Online News

சனாதனத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும்: திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், இந்து முன்னணியினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு…!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள வழி விடு வேல்முருகன் கோவில் முன்பு இன்று(மே 25) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, சனாதனத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்த ம.க.இ.க. வை சேர்ந்தவர்கள்
மத்திய பேருந்து நிலையம் அருகே ஒன்று திரண்டனர். அப்போது இந்து முன்னணியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டு சனாதனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் குச்சி மற்றும் வாட்டர் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்