திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு:* நீதி கேட்டு கல்லூரி மாணவிகள், உறவினர்கள் மறியல்!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அவருக்கு மூக்கில் சதை வளர்ச்சி இருந்ததால் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று( மே 22) அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உயிரிழந்தார். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ததால் மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இந்தநிலையில் இன்று(மே 23) மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கல்லூரி மாணவிகள் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.