சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட துறை ரீதியிலான நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வெப்பநிலை மாற்றங்கள், பருவமழை தொடங்க உள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படாமல் இருக்கிறதே என்ற கேள்விக்கு, இன்னும் ஒரு வார காலத்திற்குள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 12ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும். வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments are closed.