தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் . அந்தவகையில் இன்று( மே 21) காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏ.அமல்ராஜ் ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் அபின் தினேஷ் மோதக் அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னை குற்றப்பிரிவு சிஐடி கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், தற்போது குற்றப்பிரிவு சிஐடி பொறுப்பில் இருக்கும் டி.எஸ். அன்புக்கு பதிலாக இந்த புதிய பதவியை ஏற்க உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார். மாநிலத்தின்
தலைநகரான சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவிக்கு அனுபவம் வாய்ந்த ஏ. அமல்ராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது நிர்வாக ரீதியாகவும் காவல்துறை வட்டாரத்திலும் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.

Comments are closed.