Rock Fort Times
Online News

9 லட்சம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ‘ரிசல்ட்’…மே 20-ம் தேதி வெளியீடு!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இப்பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மாணவர்கள் தங்களது பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, கீழே உள்ள அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in வாயிலாக முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்