Rock Fort Times
Online News

பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதை வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா… !

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார். மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு நேற்று( மே 17) சென்றார். அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அரசு தரப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஸ்வீடன் வாழ் இந்திய மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா மற்றும் ஸ்வீடன், ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே இருதரப்புக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவுக்கு வாய்ப்பளிக்கிறது” என்று ஸ்வீடன் நாட்டு நிறுவனங்களின் சிஇஓ-க்கள் உடனான சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார். அதோடு அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். அப்போது இந்தியா கண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை அவர் குறிப்பிட்டிருந்தார். அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் உடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்தார். இரு தரப்புக்கு இடையே சிறப்பான உறவுக்காக பிரதமர் மோடி அளித்த பங்களிப்பு, அவரது தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையில் ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த 31-வது கவுரவ விருதாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்