Rock Fort Times
Online News

இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடாது…* சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்…

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் பான்மையை(144 எம்எல்ஏக்கள் ஆதரவு) பெற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியை தக்க வைத்தது. 22 எம்எல்ஏக்கள் எதிராகவும், 5 பேர் நடுநிலையும் வகித்தனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர், “நிச்சயமாக இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகவே தொடரும் என்று உறுதியளிக்கிறேன். வாக்களிக்காத மக்களுக்காவும் இந்த அரசு செயல்படும். முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியளிக்கிறேன். கொள்கை தலைவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் எங்களது அரசு தொடரும். தேமுதிக உறுப்பினர் பிரேமலதா முன் வைத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடவில்லை. இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடாது.  சாமானிய மக்களின் அரசாக தவெக செயல்படும். ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானதை சிறுபான்மை அரசு என விமர்சித்தால் மகிழ்ச்சியே. நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசு தான். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசு. எம்மதமும் நம் மதமே. இது சாமானியர்களுக்கான சாதி, மதம் கடந்த அரசு. பாகுபாடு காட்டாத பண்பட்ட அரசு இது. துணிச்சலாக பணியாற்றுவதே முக்கியம். அதிகாரம் காட்டும் அரசு அல்ல, அனைவரையும் அரவணைக்கும் அரசு. யாரையும் வெறுக்கும் அரசு அல்ல, அனைவரையும் விரும்பும் அரசு. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்