Rock Fort Times
Online News

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்…- கனிமொழி எம்.பி….!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருமே எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதத்தையும் வழங்கி உள்ளது. அதுபோக இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. இது தொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி இடம் செய்தியாளர்கள் கேட்டபோது, திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக கூறப்படுவது யூகம் மட்டுமே. தமிழ்நாட்டில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்