நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் அதற்கான முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது தற்போதைய சூழ்நிலையில் 5 உறுப்பினர்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழக வெற்றி கழகத்தின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் கொடுத்தார். அப்போது த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் எப்போது வேண்டுமானாலும் த.வெ.க. தலைவர் விஜயை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சென்னை வந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.

Comments are closed.