திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் லீமாரோஸ் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை விட 2,739 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவள்ளல் 55 ஆயிரத்து 565 வாக்குகள் பெற்றார். இந்நிலையில் லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற லீமா ரோஸ் சென்னை சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி தொடர்பாக தமிழக வெற்றி கழகம், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.