Rock Fort Times
Online News

அரசு பேருந்து டிஜிட்டல் பலகையில் ‘த.வெ.க.’ என கட்சியின் பெயர் வந்தது எப்படி?* அதிகாரிகள் விசாரணை!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. இந்தநிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்றில் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயர் ஓடி உள்ளது. இதை அந்தப் பேருந்தில் பின்னால் வந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  இது குறித்து நெல்லை மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாகவும் இதே போல ஒரு முறை அரசு பேருந்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே இதுபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்