Rock Fort Times
Online News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்.25) கொடைக்கானல் பயணம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார். அதன்படி அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை புறப்பட்டு சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவர் ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே​போல், கடந்த 2021-ல் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மற்​றும் 2024-ல் மக்​கள​வைத் தேர்​தல் முடிவடைந்​ததும், ஸ்டா​லின் தனது குடும்​பத்​துடன் கொடைக்கானல் சென்று தங்கி ஓய்​வெடுத்​துவிட்டு சென்னை திரும்பினார். இரண்டு ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது அதே​போல் ஓய்​வெடுக்க கொடைக்கானல் செல்கிறார். ஓய்​வுக்​காக செல்​வ​தால், கட்​சி​யினர் யாரும் முதல்​வரை சந்​திக்க அனு​மதி இல்லை என்​றும் தி​முக நிர்​வாகி​கள்​ தெரி​வித்​தனர்​.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்