டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அப்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மதுயான ஒதுக்கீட்டு வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் ராகவ் சத்தா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து, ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டார். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அனுராக் தண்டா வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில ஆண்டாகவே நீங்கள் மோடிக்கு எதிராகப் பேச அச்சப்படுகிறீர்கள். நாட்டின் உண்மையான பிரச்சனைகளை எழுப்ப அஞ்சுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்நிலையில், ராகவ் சத்தா உட்பட ஆம் ஆத்மி எம்.பி.க்கள் இன்று(ஏப்.24) அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Comments are closed.