Rock Fort Times
Online News

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: 20 நிமிடம் வரிசையில் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் கே.என்.நேரு..!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று( ஏப்.23) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி தில்லை நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமைச்சர் கே.என்.நேரு சுமார் 20 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தார். பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் கே.என்.நேரு தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்