Rock Fort Times
Online News

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் என் வீடு- மாதத்துக்கு ஒரு முறை வருவேன்…* விஜய்…!

தமிழக வெற்றிக்கழக தோ்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் பேசியதாவது:- எனது தொகுதிக்கு நான்தான் பிரதிநிதி, உறுதியாக நாம்தான் ஆட்சிக்கு வருவோம். இந்த விஜயை நீங்கள் 100 சதவீதம் நம்பலாம். ஊழல் இல்லாத ஆட்சி நடத்தப்படும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். நமது வேட்பாளர்களும் நானும் வேறுவேறு இல்லை. நமது வேட்பாளர் ஜெயித்தார் என்றால் நாம் ஒவ்வொருவரும் ஜெயித்தது போல. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் என் வீடு, இந்த 2 தொகுதிகளும் எனக்கு ஸ்பெஷல் தான். எனது 2 தொகுதிகளுக்கும் நான் மாதந்தோறும் வருவேன், என்னை நீங்கள் மிக எளிதாக சந்திக்கலாம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போடுங்கள். விஜய்க்கு நீங்கள் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். உங்கள் மகனுக்கு, உங்கள் பிள்ளைக்கு, உங்கள் அண்ணனுக்கு, உங்கள் தம்பிக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்