Rock Fort Times
Online News

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் பதவியில் இருந்து நீக்கம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பையெடுத்து திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அவரை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமை தமக்கு வாய்ப்பு வழங்க முன்வந்தபோதும், இடையீட்டால் அது கிடைக்கவில்லை என ஹசீனா சையத் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்