திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேரு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், இன்று(08-04-2026) தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 11வது வார்டு உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, காவேரி நகர், வடிவேல் நகர், டாக்கர் பங்களா, காமாட்சி அம்மன் கோவில் தெரு, அக்ரஹாரம், சௌராஷ்டிரா தெரு ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று திமுக அரசின் சாதனை திட்டங்களையும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும் எடுத்து கூறி ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்கு பொதுமக்கள் கழகக் கொடிகளையும், வண்ண பலூன் களையும் கைகளில் ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். சில பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர். இந்த பிரச்சாரத்தின் போது, அப்பகுதி குழந்தைகள் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்தனர். உடனே அமைச்சர் அந்த குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த பிரச்சாரத்தின் போது மாநகர செயலாளர் மற்றும் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அமைச்சருக்கு வாக்கு சேகரித்தனர்.

Comments are closed.