பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்து துடைத்தெறிய வேண்டும்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்தவகையில் திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்தின் மற்ற ஊர்களுக்கு நான் முதல்வர். சீர்காழிக்கு மட்டும் தான் நான் மாப்பிள்ளை. என்னதான் உங்க ஊரு மருமகனாக இருந்தாலும் வெறும் கையோடு உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. ஐந்து வருடமாக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றிக் கொடுத்த உரிமையோடு உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். மயிலாடுதுறை, சீர்காழி, நாகைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளோம். திட்டங்களை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு உங்களிடம் தைரியமாக கம்பீரமாக வாக்கு கேட்கிறேன். ஆனால் இப்படி பேசுவதற்கு எந்த தகுதியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதலமைச்சரானார் பழனிசாமி. அந்த பதவியில் இருக்க தகுதியே இல்லை என்று சொல்லி நீங்கள் தோற்கடித்தீர்கள். இப்பொழுது அவரே முதலமைச்சராக மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதி இல்லை என்பதைப் போல நடந்து கொள்கிறார். இன்றைய தராதரம் இல்லாத பேச்சுக்களால் தன்னையும், தன்னுடைய கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தல் முடிவுகள் பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்து துடைத்தெறியும் என்றார்.

Comments are closed.