Rock Fort Times
Online News

அவரால எழுந்திருக்கவே முடியல, எப்படி மக்களுடைய குறைகளை கேட்பாரு… * துரைமுருகனை விமர்சித்த இபிஎஸ்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆரணியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 2021 சட்டசபை தேர்தலில் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் நின்றார். அப்போது மக்களை சந்தித்து எனக்கு இதுதான் கடைசி தேர்தல். எனக்கு வயதாகிவிட்டது, எனக்கு வாக்கு அளியுங்கள் என்றார். மக்களும் வாக்களித்தனர். அதிமுக வேட்பாளர் ராமு 700 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறையும் தேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே அதிக முறை சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமை கிடைக்கும் என்கிறார். உங்களுக்கு பெருமை கிடைக்கிறதுக்காக, மக்களா கிடைச்சாங்க. அவருக்கு 88 வயதாகிவிட்டது. தேர்தலில் போட்டியிடுவது அவருடைய சொந்த விருப்பம். அதில் தலையிடவில்லை. ஆனால் அவரால் நடக்கவே முடியல, எழுந்திருக்கவே முடியல, எப்படி மக்களுடைய குறைகளை கேட்பாரு. சட்டசபை உறுப்பினர் என்றால் சட்டசபை தொகுதி முழுவதும் சுழன்று மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். நடந்து சென்றாலே பிடித்துக் கொண்டு செல்கிறார். நான் தவறாக சொல்லவில்லை. நான் அண்ணன் துரைமுருகனை மதிக்கக் கூடியவன். அவருடைய வயது மூப்பை பார்க்க வேண்டும். அதனால் காட்பாடியில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ராமுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்