Rock Fort Times
Online News

முசிறி தொகுதி திமுக வேட்பாளர் கருணைராஜா கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு…!

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதி திமுக வேட்பாளராக கருணை ராஜா போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ மற்றும் கழக நிர்வாகிகளுடன் தொட்டியம், நத்தம், காடுவெட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேரில் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது பொதுமக்கள் வேட்பாளர் கருணைராஜாவுக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுக்கு உழைக்க வந்துள்ளதாக வாக்குறுதி அளித்து கருணைராஜா உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். பாலசமுத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் இருகரம் கூப்பி ஆதரவு கேட்டார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்