திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பணிமனை…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காட்டூர், அம்மன் நகர் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அருகே திமுக தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி இன்று( ஏப்ரல் 4) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், மணப்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்துல் சமது, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், சிவக்குமார், ஏ. எம்.ஜி. விஜயகுமார், நகர கழக செயலாளர் காயாம்பு, ஒன்றிய கழக செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல், பெல் தொ.மு.ச பொதுச் செயலாளர் தீபன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


Comments are closed.