திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக் கே வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவர் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது திமுக சார்பில் பொதுமக்களுக்கு இதுவரை செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு தான் கொண்டு வந்த திட்டங்களை எடுத்து கூறி தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Comments are closed.