தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று( ஏப்ரல் 1) திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக திருச்சியில் தங்கியுள்ள அவர், அதிகாலை நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று காலை திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தினார், அதன்பிறகு திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேருக்கு
ஆதரவாக பீமநகர் பகுதியில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


Comments are closed.