திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் அறிவிக்கப்பட்டார். இதனைதொடர்ந்து திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்திற்கு இன்று(மார்ச் 28) வருகை தந்த வேட்பாளர் ப.குமாருக்கு நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் ப.குமார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப்
படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் தங்களது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

Comments are closed.