Rock Fort Times
Online News

மதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி)ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் மணப்பாறை
ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. முக்குலத்தோர் புலிப்படைக்கு சிவகங்கை தொகுதியும், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் சட்டமன்ற தொகுதியும், தமிழர் தேசம் கட்சிக்கு நத்தம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்