Rock Fort Times
Online News

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார்: பேராசிரியர் கைது…!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிப்புரிந்து வரும் பேராசிரியர் ஞானவேல் பாபு, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உள் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் மாணவி புகார் அளித்துள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக குவிந்த இந்திய மாணவர் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட தங்களது தோழிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் போக்சோ விசாரணைக் குழுவின் தலைவர் தலைமையில் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேராசிரியர் ஞானவேல் பாபுவை சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தநிலையில் பேராசிரியர் ஞானவேல் பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்