தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. அதேபோல, என்.டி.ஏ. கூட்டணியிலும் முக்கிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(23-03-2026) திருத்தணியில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். கையில் வேலுடன் திருத்தணி மலை ஏறிய சீமான் வழிபாடு முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “என் தாய் நாட்டை சொர்க்க பூமியாக மாற்றுவேன். நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். இது, நீண்ட காலப்போர் என்பதால் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாக தெரிவித்தார்.

Comments are closed.