தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மறுபுறம் திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை( 21-3-2026) சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நேர்காணல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 23-3-2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 23 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும். இத்தகவலை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


Comments are closed.