Rock Fort Times
Online News

தமிழகத்தில் நாளை( மார்ச் 21) ரமலான் பண்டிகை…* தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு…!

இஸ்லாத்தில் கலிமா, தொழுகை, ஜகாத், ஹஜ், ரமலான் நோன்பு ஆகிய ஐந்தும் முக்கிய கடமைகள் ஆகும். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் முதன்முதலில் இறைத்தூதர் முகமது நபிக்கு ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டதால் இந்த மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரமலான் நோன்பிருத்தலை கடமையாக கருதி இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அதன்படி, 30 நாட்களும் 5 வேளை தொழுகையும், சிறப்புத் தொழுகையும் நடத்தப்படும். 30 நாட்கள் நோன்பின் முடிவில், ரமலான் பண்டிகை எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்தவகையில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை நேற்று தமிழகத்தில் தென்படவில்லை என்பதால் நாளை (மார்ச் 21) ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் எனும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்