Rock Fort Times
Online News

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இன்று( மார்ச் 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும், 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அவர்களுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டு ஒரு தொகுதி குறைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்