Rock Fort Times
Online News

நெல்லை அருகே பரபரப்பு: காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்பு…!

நெல்லை மாவட்டத்தில் காரில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டைகுளம் பகுதியில் சாலை ஓரமாக எரிந்த நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளதால் அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது காரில் நான்கு பேர் சடலமாக கிடந்தனர். அந்த சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அந்த கார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. தமிழ்நாடு வந்துவிட்டு கேரளாவுக்கு திரும்பிச் சென்றபோது காரில் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் 4 பேர் சடலமாக கிடந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்