தமிழகத்தில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டு உள்ளனர். கரூர் எஸ்.பி.யாக டி.என்.ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்.பி.யாக டி.வி. கிரண் சுருதி, நாகை எஸ்.பியாக சுஜித்குமார், விருதுநகர் எஸ்.பி.யாக என். ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஸ் தங்கையா, திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவரை மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அரசியல் கட்சியினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.