சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்ட விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் இன்று( மார்ச் 14) டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை அவர் சிபிஐ முன்பு ஆஜராகிறார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த விஜய்யின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய், சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். இதே போல ஆதவ் அர்ஜுனா பையில் மதுபாட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்களால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.