விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் ‘ரீல்ஸ்’ போடுவதா?* முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சாத்திப்பட்டைச் சேர்ந்தவர்கள் இன்ஸ்டா பிரபலமான சிறுவர்கள் தேவா, ஜீவா ஆகியோரைச் சந்தித்த காணொலியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 14) வெளியிட்டுள்ளார். இந்தநிலையில், சிறுவர்களை விளம்பரத்துக்காக பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. விளாத்திகுளம் மாணவி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. ஆனால், இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல், ‘ரீல்ஸ்’ போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நீங்கள் அந்த இரண்டு சிறுவர்களிடமும், ரீல்ஸ் போடுவதோடு மட்டுமல்லாமல், கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன அறிவுரை, இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை. நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்? கல்வி நேரம் போக, தங்கள் கடின உழைப்பினால், இன்று தமிழகம் முழுவதும் தெரிந்த முகமாகியிருக்கும் இரண்டு சிறுவர்களையும், உங்கள் விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்திக் கொடுங்கள். பள்ளிகள் வரை வந்துவிட்ட கஞ்சா உட்பட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துங்கள். உங்கள் விளம்பர நாடக அறிவுரை இல்லாமலேயே அவர்கள் படிப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.