Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு 4 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்