திருச்சி, தென்னூர் அண்ணா நகரில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சி மையம்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி மாநகராட்சி, மண்டலம் 5, வார்டு எண் 28, தென்னூர் அண்ணாநகரில் ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மைய கட்டிடத்தை தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (மார்ச் 10) திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜுலு, சாமி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் இளமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த நவீன உடற்பயிற்சி மையத்தில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தினை பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Comments are closed.