பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை(11-03-2026) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வே.சரவணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாரத பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11.03.2026) முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.